Sunday, March 28, 2010

Ponniyin Selvan

முன்பு கூறியவாறு, (பல நாட்கள் தள்ளிப்போகிவிட்ட) பொன்னியின் செல்வன் பற்றிய ஆய்வு, இதோ.

நினைவு தெரிந்த வரை, நான் பல முறைகள்  நம் நாட்டு வரலாற்றை, சரித்திரத்தை பற்றி கற்பனை செய்திருக்கிறேன். ஒரு 2000 வருடங்களுக்கு முன்னர் எப்படி எல்லாம் மக்கள் இருந்திருப்பார்கள். அவர்கள் அன்றாட வாழ்க்கையில் எதற்கு முக்கியத்துவம் கொடுத்திருப்பார்கள், எதனை சிறப்பாக கொண்டாடியிருப்பார்கள். அரசியல், மன்னராட்சிகள்  எல்லாம் எப்படி இருந்திருக்கும்.....
நம் நாடு என்றால் தமிழ் நாடு, இந்தியா மற்றும் இல்லை, பொதுவாகவே உலக வரலாற்றில், மக்கள் வரலாற்றில்  ஒரு ஈர்ப்பு.....

நடுங்கும் பனிக்காலத்தில்  மிளகு ரசம் போல் இருந்தது, இந்த ஆர்வத்திற்கு, கற்பனைக்கு பொன்னியின் செல்வன்.
 
ஏறத்தாழ கி.பி. 1000. தென்னிந்திய மக்கள் வரலாற்றில் ஒரு பொற்காலம். வட இந்தியா, துருக்கியர் மற்றும் பாரசீக நாட்டு படைகளிடம் சூறையாட பட்டு வந்த அதே நேரத்தில் தென்னிந்தியாவில் மக்கள் மாபெரும் கோவில்களை எழுப்பி சைவ,வைணவ பிரிவுகள் பிரகாசித்த நேரம். தமிழர்களின் பெருமைக்குரிய புலிக்கொடி தமிழகத்திலும்
ஈழத்திலும் பறந்த  நேரம். குலம் தாழ்ச்சி உயர்ச்சி பெரிதும் இல்லாமல் தமிழர் என்ற அடையாளம் தழைத்தொழுங்கிய  காலம்.......... அப்படி பட்ட காலத்தில் ஒரு நாளில் தொடங்குகிறது கதை.

நான் அந்த புத்தகத்தில் முதலில் படித்த ஒரு சில வரிகளிலேயே, எழுத்தாளரின் கற்பனை வடிவத்தை வியந்தேன்.  முதல் இரண்டு மூன்று பக்கங்கள் முழுதும் ஒரு குதிரை வீரன் தான் செல்லும் பாதையில், சோழ நாட்டில் அன்றாட காணப்படும் கிராமப்புரக்காட்சியின் விவரிப்பு. எனக்கு முன்னர் யாரோ ஓவியம் தீட்டினார் போன்று இருந்தது... அந்த குதிரை வீரன் தான் கதாநாயகன். ஒரு அருமையான பாத்திரம். மன்னர் குலத்தில் பிறக்கவில்லை. ஆனால் வீரம் மிகுந்தவன். அரசியல் தந்திரங்கள் அறிந்தவனில்லை. ஆனால் விவேகம் மிக்கவன். ஒரு இளமை ததும்பும் நகைச்சுவை தன்மை. தலை கணமே இல்லாத ஒரு இயல்பான பண்பு. எல்லாத்திற்கும்  மேல் ஒரு உண்மையான நண்பன்.
வந்தியத்தேவன் வல்லவரையன் என்பது அவன் பெயர்.

வந்தியத்தேவனின் பயணம், அவன் எதிர்கொள்ளும் சம்பவங்கள் எல்லாம்  ஒரு பக்கம் தொடர, அருள்மொழிவர்மனின் (பிற் காலத்தில் ராஜ ராஜ சோழன்) கண்போக்கில் இருந்து ஓடுகிறது கதையின் வேறு சில பாகங்கள்.  19 வயது வாலிபனாயிருப்பினும்  ஈழத்தில் முற்றுகை இட்டிருக்கும் படைத்தளபதி. சோழ நாட்டு இளவரசன். மக்கள் மற்றும் வீரர்கள் போற்றும் ஓர் அரிய  முகக்கலையும் கம்பீரமும் தானாக அமைந்திருந்த  தலைவன்.

கதை பாதிக்கு மேல் ஓடிவிட்ட பின்னரே வந்தியதேவனும் அருள் மொழி வர்மனும் சந்திக்கின்றனர். நண்பர்களாக இல்லை, இரண்டு பேரும் சந்தர்ப்பத்தின் படி சண்டையிட வேண்டிய சூழ்நிலை!! வந்தியத்தேவன் தோற்கிறான். ஆனால் சில நிமிடங்களே ஆன அந்த வாட்போர் மூலம் அருள்மொழி வர்மனின் நட்பை வெல்கிறான்......

பொன்னியின் செல்வன் ஒரு காதல் கதையும் கூட. அருள்மொழி வர்மன் மற்றும் வானதியின் கபடம் இல்லா, முற்றிலும் நம்பக்கூடிய  காதல்.. அவன் முதன்முதலில் வானதியை சந்தித்தது. பிற்காலத்தில் ராஜேந்திர சோழனின் தாயாகப்போகிறவள்  என்பதை ஒரு ஜோசியகாரன் அவளுக்கு சொல்லாமல் சொல்ல, வானதியின் வியப்பு. அவள் தோழியின் கிண்டல்...

A Beautiful sense of omniscience and foreboding...

அதே சமயம் பூங்குழலி என்னும் அர்ச்சகர் மகளான சோழ நாட்டுப்பெண். அவளுடைய தைரியம். நகைச்சுவை தன்மை. நாட்டுப்பற்று. ராஜ ராஜ சோழன் மீது அவள் கொண்ட குழப்பம் மிகுந்த காதல்....

இந்த சூழ்நிலையில், வேற்று நாட்டு சக்திகள், உள் மற்றும்  வெளித்தர சூழ்ச்சிகள், அபாயம் கலந்த தடங்கல்கள் எல்லாவற்றையும் மீறி, பொன்னியின் செல்வனான அருள்மொழிவர்மன் எவ்வாறு ராஜ ராஜ சோழனாக முடிசூடுகிறான் என்பதே கதை......

Read it! என்னமோ எனக்கு  பிடித்திருந்தது :)
Hardly what you would call "New age", but a special genre nonetheless.

3 comments:

  1. ah! So thoughtful :P Man, every time I see a tamizh post, I am cursing myself for not understanding! But it's ok, i got paati to tell me the gist of it lol keep posting :)

    ReplyDelete
  2. rite, is tamil ur native tongue..
    hey ur not missing out on that much. itz just a book r/v. ;)

    ReplyDelete
  3. I agree with you 100%. This novel was a delight to read. Completed all 5 parts 2 days back and now discussing all over everywhere. Not to mention I'm missing the pleasure of reading it. I was searching for some blogs to post my comments and yours is one of the lucky picks ;)

    ReplyDelete