எதை பற்றி எழுத போகின்றேன் என்று முன்னரே யோசிக்கவில்லை........
எனினும்....
சின்ன வயதில் எனக்கு கதை கேட்பது, கதை புத்தகங்கள் படிப்பதில் எல்லாம் படு ஆர்வம். "பாட புத்தகத்தை எடுத்து வைத்து படியேன் டா, உருப்படுவாய்." பல முறை அம்மாவிடம் திட்டு வாங்கியிருக்கிறேன்.
செய்தித்தாளின் இணைப்புகளான சிறுவர் மலர், சிறுவர் மணி இதற்காகவே காலங்காலையில் வெளியில் காத்திருப்பேன்.
ஆனால் உடனே நினைவுக்கு தோன்றுவது தமிழில் நான் மிகவும் படித்து "ரசித்த" முதல் நூல். "வெற்றித்திருமகன்"

அப்போது என்ன வயது, எந்த வகுப்பில் படித்து கொண்டிருந்தேன் என்பதெல்லாம் நினைவில்லை.....
ஒரு நாள் பாட்டி வீட்டில் ஏதோ ஈ ஒட்டி கொண்டிருந்தேன். வீட்டில் அனைவரும் எங்கோ சென்றிருந்தார்கள். இல்லை தொலைக்காட்சியில் ஆழ்ந்திருந்தார்கள். படு வெறுப்பாக இருந்த ஞாபகம். படியேறி மாடிக்கு சென்றேன். அங்கு தாத்தாவினுடைய நூல்கள் பல குவிந்து கிடந்தன.
சிலப்பதிகாரம், திருக்குறள், பாரதியார் கவிதைகள்.......
ஹ்ம்ம் ச்சே, பிடித்த மாதிரியோ நேரத்துக்கு ஏற்ற மாதிரியோ ஒன்றுமே இல்லையே.... அப்போது சட்டென்று ஒரு வண்ணம் கலந்த அட்டை கண்களை கவர்ந்தது. மற்ற நூல்களை விலக்கி கையில் எடுத்தேன். சுமார் 200 பக்கங்கள் இருக்கும். அட்டையில் "சிவனுதிசை" வில்லை இராமர் முறிக்கும் படம்.
இராமாயணம். எளிமையான நாடக நடையில். ஒவ்வொரு பாத்திரமும் அவ்வளவு தெளிவாக சித்தரிக்கப் பட்டிருந்தனர். கதையின் படி நல்லவர்களோ கெட்டவர்களோ, யாரையுமே வெறுக்க தோன்றவில்லை. எல்லோருமே கதாநாயகர்களாக தான் தெரிந்தனர். எனக்கு மிகவும் பிடித்திருந்த கதாபாத்திரங்கள் அனுமன், இலக்குவன் (லக்ஷ்மணன்) , மற்றும் பரதன். இந்திரஜித்துக்கு தனி ஸ்டைல்.

அவர்கள் பேசிய வசனங்கள், வருணிக்க பட்டிருந்த போர் காட்சிகள், எல்லாம் நானே என்னவோ அவர்கள் மத்தியில் இருந்த மாதிரி தோன்றியது.
அந்த புத்தகத்தை நான் எவ்வளவு முறை படித்தேனோ. ஆனால் அதன் பிறகு நான் மறுபடியும் தமிழில் ஒரு நூலை படித்து ரசித்தது இந்தியாவிலேயே இல்லை!
மருத்துவ கல்லூரியில் நான்காவது ஆண்டு முடிந்திருந்த நேரம். 2 மாதம் விடுமுறை. ஒரு அழகான கோடை நாள். "காக்கா மாதிரி திரிவதை விட்டு ஏதாவது உருப்படியா பண்ணேன் டா" (அம்மா)....
ஆக்லாந்தில் ஒரு புற நகர் பகுதிக்கு ஒரு நூலகம் இருக்கும். நூல்கள் கடன் வாங்குவது முற்றிலும் இலவசம்! மற்றும் ஒரு மாதம் அவகாசம், திரும்ப கொடுப்பதற்கு.
அங்கு ஒரு மணி நேரம் அப்படியே வலம் வந்து விட்ட பின், என்னை பல வாரங்கள் ஆழ்த்திய அருமையான ஒரு தமிழ் புத்தகத்தை வீட்டுக்கு எடுத்துச்சென்றேன்.
அமரர் கல்கியின் "பொன்னியின் செல்வன்" என்ற வரலாற்று புதினத்தை எனக்கு அறிமுகம் செய்த அந்த சின்ன ஆக்லாந்து நூலகத்தை
என்றென்றும் மறக்க இயலாது.
எனவே.. பொன்னியின் செல்வன்..... இதை பற்றி அடுத்த (அல்லது அதற்கு அடுத்த) இணையப்பதிப்பில்!